எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
சீர்காழி அடுத்த புத்தூரில் மக்கள் தொடர்பு முகாம். நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் சீர்காழி தொகுதி கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தியாம் பேட்டை கிராம மக்களுக்கான மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
இதில் சீர்காழி . சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் இந்நிகழ்ச்சியில் சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
வேளாண்மை இணை இயக்குனர் சேகர்,மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் உமாமகேஸ்வரி,மாவட்ட கவுன்சிலர் விஜயபாரதி,கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம்,மயிலாடுதுறை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பங்கேற்று கர்ப்பினி பெண்களுக்கான ஊட்டசத்து பெட்டகம்,விவசாயிகளுக்கு மானியத்துடன் இடுபொருட்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆகியவற்றை வழங்கி சிறப்புறையாற்றினர்
நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 157 மனுக்கள் பெறப்பட்டது இதில் 68. மனுக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டது இலவச மனை பட்டா 74 பேருக்கு ஓ. எ .பி .28 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை 2 தோட்டக்கலைத் துறை சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கப்பட்டது