பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்த தொடர்பாக பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் .
நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் K.ப்ரெட்ரிக் மற்றும் அம்மாபேட்டை இல்லம் தேடி கழுவி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆவியூர் கலந்து கொண்டு கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சி முகாமில் 239 க்கும் மேற்பட்ட பதிவு அலுவலர்கள் கலந்து கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்து குறித்து பயிற்சி பெற்றனர்