ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், சித்தாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சித்தாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 125 பயனாளிகளுக்கு ரூ. 14 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ. வழங்கினார்.
முகாமில், 35.செருகளத்தூர், 33.சித்தாடி, 44.ஆடிப்புலியூர் ஆகிய கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் சித்தாடி கிராமத்தில் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட ஆட்;சித்தலைவர் தெரிவித்ததாவத
மக்கள் நேர்காணல் முகாமானது, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வட்டம் வாரியாக, தேர்;வு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நேர்காணல் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் நேர்காணல் முகாமில் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று துறைச்சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைக்கின்றனர். பொதுமக்களிடம் அரசின் நலதிட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு இம்முகாம் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
முன்னதாக, மக்கள் நேர்காணல் முகாமிற்காக பெறப்பட்ட 149 மனுக்களில் 79 மனுக்கள் ஏற்கப்பட்டது.
மக்கள் நேர்காணல் முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரமும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு குறுவை தொகுப்பு, விவசாய உபகரணங்கள், நெல் நூண்ணூட்டம் உயிர் உரம் உள்ளிட்ட இடுப்பொருட்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு காய், கனிக்கன்றுகளும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் 57 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும், வருவாய்த்துறையின் சார்பில் 40 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவிற்கான ஆணையும், வட்ட வழங்கல் துறை சார்பில் 14 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும் என 125 பயனாளிகளுக்கு ரூ.14 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் .சங்கீதா, உதவி ஆணையர் (கலால்) அழகர்சாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) லதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, குடவாசல் வட்டாட்சியர் தேவகி, செருகளத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் மணிஆடிப்புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்