திருவொற்றியூர்-மணலி மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி மணலி சேக்காடு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர்- மணலிக்கு இடையே போக்குவரத்திற்காக பக்கிங்காம் கால்வாய். மீது மேம்பாலம் கட்டுமான பணி கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது.
ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் மந்தகதியில் நடைபெற்று தற்போது வரை முடிவடையாமல் உள்ளது.இதனால் திருவொற்றியூரிலிருந்து மணலிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் நேரமும் பணமும் விரையமாவதுடன், கனரக வாகனங்கள் செல்லக்கூடிய பாதையில் மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இந்த கால்வாய் மேம்பாலத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று என்பதை வலியுறுத்தி மணலி சேக்காடு பொதுவியாபாரிகள் சங்கம். சார்பில் மணலி மார்க்கெட் அருகில் சங்க தலைவர் டி. ஏ. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் பூபாலகிருஷ்ணன்,நிர்வாக செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர். த. வெள்ளையன் தொடங்கி வைத்து பேசும்போது உடனடியாக நன்றி வணக்கம் விரைவில் முடிக்காவிட்டால் நடத்தும் என்று கூறினார்
செயலாளர் சௌந்தர்ராஜன் மற்றும் வியாபாரி சங்க நிர்வாகிகள் ராமசாமி, தங்க குமார், தேவராஜ், சுகுமார்,வியாசைமணி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கோகுல், சுரேஷ் மற்றும் ஏராளமான வியாபாரிகள் பொதுநல சங்கங்கள் ஆகியோர் ஒன்று கூடி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேம்பால பணியை உடனடியாக முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து மணலி போலீசார் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.முடிவில் பொருளாளர் நாராயண்லால் நன்றி கூறினார்