கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை
பாதுகாப்பது எப்படி
இயற்கை முறை வைத்தியம்.இந்தியாவில் கால்நடைகளை தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடிய கொடிய நோய்களில் ஒன்றான கோமாரி நோயானது, பொதுவாக ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாத கட்டத்திற்குள் ஏற்படும். உடல் வெப்பநிலை 104-106.6 பாரன்ஹீட் வரை அதிகரிக்கும். அதிகமாக உமிழ்நீர் சுரக்கும், பசியின்மை, அசை போடுவது குறையும், கொப்புளங்கள் குழம்புகளிலிருந்து காணப்படும்.
இதனால் நடக்க சிரமப்படும். வாயில் கொப்புளங்கள் ஏற்படும், பால் உற்பத்தி குறையும், கால்நடைகளில் கருச்சிதைவு ஏற்படும், கன்றுகள் தொற்று இருக்கும் பாலை பருகுவதனால் இறப்பு ஏற்படும். நோயிலிருந்து மீண்ட கால்நடைகளில் மடி வீக்கம், நீரிழிவு நோய், ரத்த சோகை, மூச்சிரைப்பு, பால் உற்பத்தி குறைதல், ரோமங்களில் அதிக வளர்ச்சி போன்ற அறிகுறிகள் காணப்படும். இதிலிருந்து நமது கால்
நடைகளை எப்படி பாதுகாத்துக் கொள்வது
என்பதை பற்றி பார்ப்போம்.
பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்த வேண்டும். கன்று குட்டிக்கு பால் ஊட்டுவதை நிறுத்த வேண்டும். நோய் பாதித்த கால்நடைகள்பராமரிப்பவர்கள் பக்கத்தில் செல்லும் பொழுது முறையாக கைகால்களை சுத்தம் செய்த பின்பு செல்ல வேண்டும்.
கோமாரி நோயால் அவதிப்படும் மாடுகள் வாய்ப்புண் வந்து உணவு உண்ண சிரமப்படும். இந்த வாய்ப்புண் குணமாக சீரகம் 10கிராம், வெந்தயம் 10கிராம், மிளகு 10கிராம், பூண்டு 4
பல், இந் நான்கையும் நன்கு அரைத்து அதனுடன் மஞ்சள் தூள், தேங்காய் துருவல் சிறிதளவு மற்றும் வெல்லம் சிறிதளவு அனைத்தையும் உருண்டை பிடித்து மாட்டிற்கு காலை, மாலை
தொடர்ந்து உட்கொள்ளகொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுத்தால், கோமாரி நோயால் ஏற்பட்ட வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோமாரி நோயால் மாடுகளின் கால்களில் மருதாணி இலையுடன் 4,5கற்பூரம்
சிறிதளவு மஞ்சள் பொடி மூன்றையும் நன்கு அரைத்து அதனுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவி வர கால் புண்கள் விரைவில் குணமடையும். இந்த தகவலை ஈஷா மண் வள
பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.