வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் கண் சிகிச்சைமுகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் டிஇஎல்சி துவக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணம் குந்தவை நாச்சியார் அரிமா சங்கம் சார்பில் மாணவர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கும்பகோணம் குந்தவை நாச்சியார் அரிமா சங்க தலைவர் ஜெ. சாந்தி வேல்முருகன் தலைமை வகித்தார்,
செயலாளர் ஜீவா வெங்கடேசன் முன்னிலை வகித்தார், முன்னாள் அரிமா சங்க தலைவர் மாதவி கோவிந்தராஜ் முகாமில்கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். இன்ப ராஜ், உதவி ஆசிரியர்கள்ஜெஸி பியூலா, பொன்ராணி, ஜேனட், செல்வி ஆகியோர் முன்னின்று செய்திருந்தார்கள், பள்ளி 170 மாணவ-மாணவிகளுக்குகண் பரிசோதனை செய்யப்பட்டது. கும்பகோணம் சக்ரா ஆப்டிக்கல்ஸ் நிறுவனர்,மற்றும் கண் மருத்துவர்கள் ஆகியோர் முகாம் சிறப்புற நடைப்பெற பேராதரவு நல்கினர்.
நிகழ்ச்சி முடிவில் மருத்துவர்கள்மாணவர்களுக்கு கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சி முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். இன்ப ராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.