நாமக்கல்
மத்திய பாஜக அரசு 2023- 24 பருவத்திற்கு 10. 25 சதவீதம் பிழித்திறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 3150 அறிவித்ததை கண்டித்தும்9.5 சதவீதம் பிழித்திறன் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 5000 வழங்கிட கோரியும்தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் இன்று நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மணப்பள்ளி பி. பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை எஸ். எப்..ஐ (SFI) மாநில முன்னாள் தலைவர் ஏ .டி .கண்ணன் துவக்கி வைத்தார்
அகில இந்திய விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் படைவீடு பி. பெருமாள், சர்க்கரை ஆலை இயக்குனர் தனலட்சுமி பாலசுப்பிரமணியம், ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் பி. ராமநாதன், எம் .பாலு, கே. சேகர், மற்றும் நாமக்கல் மாவட்ட இந்திய விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் என் ஜோதி, வி. சதாசிவம், மே. து. செல்வராஜ் இ. எம். ராஜேந்திரன் பி தங்கரத்தினம், உள்ளிட்டவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்
இறுதியில் கரும்பு விவசாயிகள் சங்கத்தில் ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கே. கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்