தனியார் நிதி நிறுவன மோசடி புகார்!

பல கட்ட போராட்டத்திற்கு பின்பும் உரிய நீதி கிடைக்காததால் ஏழை மக்களுக்கான நீதி செத்து மடிந்து விட்டதாக தனது கையையும், கண்ணையும் கருப்பு துணியில் கட்டிக் கொண்டு நடுரோட்டில் போராட்டம் நடத்தும் கிராமத்து பெண்!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்த 5 சவரன் நகையை மீட்க வந்த பெண்ணிற்கு நகையை திரும்ப தராமல் நிதிநிறுவன ஊழியர்கள் இழுத்தடித்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் கடந்த ஜனவரி மாதம் நிறுவனத்தின் கதவை பூட்டி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கையை அடுத்துள்ள முலைகுளம் கிராமத்தை சேர்ந்த கனவனை இழந்த விதவை பெண் ராஜரெத்தினம். இவர் குடும்ப தேவைக்காக தன்னுடைய 5 சவரன் தங்க நகையை சிவகங்கை வ.ஊ.சி தெருவில் உள்ள நிதி நிறுவனத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடகுவைத்து சுமார் ஒரு லட்சத்தி 30 ஆயிரம் ரூபாய் பெற்று சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ராஜரெத்தினத்தின் வீட்டிற்கு நிதி நிறுவனத்திலிருந்து தங்களின் நகை அடகு வைத்த நகைக்கான கால அவகாசம் முடிவடைய உள்ளதாக கூறி கடிதம் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அசல் பணத்துடன் வட்டி பணத்தையும் சேர்த்து நிதி நிறுவனத்திற்கு வந்து நகையை மீட்க வேண்டும் என ராஜரெத்தினம் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் பணத்தை செலுத்தினாலும் நகையை உடனடியாக திருப்பி தர இயலாது என கூறி அழைக்களித்ததால் சிவகங்கை நகர் காவல் நிலையம், எஸ்.பி அலுவலகம் என அனைத்து இடத்திலும் நகையை திரும்ப பெற்று தர கோரி மனு அளித்துள்ளார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த ராஜரெத்தினம் கடந்த ஜனவரி மாதம் அந்த அலுவலகத்திற்கு வந்ததுடன் அலுவலக கதவை மூடி பூட்டு போட்டு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து கதவை திறக்க வைத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பல கட்ட விசாரணைக்கு இன்பம் காவல் நிலையத்தில் உரிய தீர்வு ஏற்படாததால் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் மீண்டும் காவல்துறை இதற்கு உரிய விசாரணை செய்து தீர்வு ஏற்படுத்திக் கொடுக்குமாறு கூறினார்கள் காவல் துறையும் நிதி நிறுவனத்துடன் பேசி தீர்வு ஏற்பட்ட முயற்சி செய்தும் தீர்வு ஏற்படவில்லை தொடர்ந்து இந்த கிராமத்து பெண்ணை நிதி நிறுவனம் அலைக்கழித்துள்ளது

இனிமேல் இதற்கு தீர்வு ஏற்படாது என்று முடிவு செய்த இந்த பெண் இன்று அந்த நிதி நிறுவன வாயில் முன்பு கண்ணில் கருப்பு கண்ணிலும் கையிலும் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஏழை மக்களுக்கான நீதி செத்து மடிந்து விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டார்

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு வருகை தந்து அந்த பெண்ணுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *