திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு அண்ணா சாலை முன்பு நடைபெற்றது
அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பின்படி திமுக அரசின் விலைவாசி உயர்வையும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் கட்டுப்படுத்த தவறியதை கண்டித்து இன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி தலைமையில் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பொன். சரஸ்வதி ,ராசிபுரம் முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா, நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. பி .பாஸ்கர், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கே. சேகர் அதிமுக மாவட்ட நகர நிர்வாகிகள் அதிமுக உறுப்பினர்கள் மற்றும்ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்