நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் அனிச்சம் பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக போக்குவரத்து வசதி இல்லை,மண் சாலையை விட்டால் ஒரு தார் சாலை கூட இல்லை இங்கு இந்த அனிச்சம் பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறது
இங்கு தற்பொழுது மினி பஸ் மட்டும் சென்று வருகிறது அனைத்து பள்ளி பேருந்துகளும் இந்த சாலையில் தான் 3 கிலோ மீட்டர் வரை சென்று திரும்பி வர வேண்டும்
ஆனால் இந்த கரடு முரடான மண்சாலையாகத்தான் இருந்து வருகிறது இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தும் இதுவரை இந்த சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசாங்கம் இந்த ஊருக்கு செய்து தர முன்வரவில்லை
இது மட்டுமல்லாமல் இந்த ஊருக்கு போதிய குடிதண்ணீர் ,போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருக்கிறது
இந்த அனிச்சம் பாளையம் ஒரு தனித்தீவு போல இருந்து வருகிறது ஆகவே பொதுமக்கள் இது குறித்து இத்தனை நாட்கள் புகார் கொடுத்தும் கோரிக்கை வைத்தும் எந்த நன்மையும் ஏற்படாததால் இது குறித்து இன்று பரமத்தி வேலூர் பேரூராட்சி அலுவலகம் திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்துகின்ற நிலை ஏற்பட்டது
அப்போது அந்த சாலையில் அவ்வூர் மக்கள் கூடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்
ஆகவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இந்த அனிச்சம் பாளையம் கிராமத்திற்கு உரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் சாலை வசதி உட்பட அனைத்தும் செய்து தந்து தார் சாலை கூட்டு தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள்
இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவனம் செலுத்தி இந்த ஊர் சாலை பிரச்சினையை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்
இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் மினி பேருந்து ஓட்டுனர்கள், இரண்டு சக்கர வாகனத்தை செல்பவர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து தங்கள் கருத்துக்களை வலியுறுத்தினார்கள்