மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சீர்காழி திருக்கோலக்கா தெரு சரவணன் இல்லத்தில் அமைந்துள்ள வன்னியர் சங்க கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செம்மங்குடி துரை முத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் லண்டன்.ஆர்.அன்பழகன் வன்னியர் சங்க கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
அப்போது வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது,
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பூக்கடை செந்தில், புளிச்சக்காடு பாலு, பி எஸ் குமார், நகர தலைவர் கார்த்திக், திருக்கோலக்கா சரவணன், எஸ் ஆர் சரவணன், மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் நந்திய நல்லூர் ராஜேஷ் Pmk Rajesh Sirkali , மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் எருக்கூர் சின்னமணி, ச.மு.ச பொறுப்பாளர் மணிமாறன், குண்டு கண்ணன், முரளிராஜ் மற்றும் வன்னியர் சங்க இளைஞர்கள் பாட்டாளி சொந்தங்கள் கலந்து கொண்டனர்..