திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா உரையரங்கம் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சங்க துணை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், செயலாளர் முகமது ஜியா, வழக்கறிஞர் ஆதிச் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க தலைவர் வந்தை குமரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக புதுவை தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் வி. முத்து பங்கேற்று கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பல்வேறு சேவைகள் புரிந்த சமூக ஆர்வலர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டது. மேலும் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் பொது வாழ்வா…! கலை வாழ்வா…! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக பட்டதாரி ஆசிரியர் ஆர் எஸ். சிவக்குமார் பங்கேற்றார்.
பொது வாழ்வே என்ற அணியில் நகர் மன்ற துணைத் தலைவர் சீனுவாசன், ஆசிரியை பூவிழி, முனைவர் சுரேஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர். கலை வாழ்வே என்ற அணியில் நல்லாசிரியர்கள் ரகுபாரதி, ரஷுனா, ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். சங்க கௌரவ தலைவர் அன்சாரி, ஆசிரியர் ராஜவேலு, தலைமை ஆசிரியர்கள் வாசு, அருள் ஜோதி, ரயில்வே காட் தனசேகரன், சமூக ஆர்வலர்கள் பூங்குயில் சிவக்குமார், தமிழ்ராசா, எம்.பி. வெங்கடேசன், வந்தை பிரேம், ஆரியன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் சதானந்தன் தொகுத்து வழங்கினார். இறுதியில் பொருளாளர் கபிலன் நன்றி கூறினார்.