கோவை மாவட்டம் வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் ஆரஞ்சுபாடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அதிகமாக பலா மரங்கள் உள்ளன இந்நிலையில் தற்போது பலா காய்கள் பழுத்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களாக அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ள கொம்பன்யானை ஒன்று பலாப்பழங்களை உண்டு விட்டு அப்பகுதி தேயிலைத் தோட்டத்தில் படுத்து ஓய்வெடுத்து விட்டு எழுந்து நிற்கும் அழகிய காட்சியை அப்பகுதி பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் இக்காட்சி தற்போது வைரலாகி வருகிறது மேலும் இந்த ஒற்றை காட்டுயானை அப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் தராமல் தானுண்டு தனது வேலையுண்டு என்று இருந்து வரும் போதிலும் பொதுமக்கள் சற்று அச்சமடைந்துள்ளனர்