கோவை
அரசு பழங்குடியினர் நல இயக்குனரகம் சார்பில்நடத்தப்படும் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி-கோவையில் இருந்து சென்ற அரசு பள்ளி மாணவ மாணவிகள்..
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மணவிகளுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி சேலத்தில் நாளை நடைபெறுகிறது.
மாநில அளவிலான நடக்கவிருக்கும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கோவை ஆணைகட்டி அரசு உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் 44 பேர் 6 ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்டனர்.
இதனை கோவை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுரேஷ் மாணவர்களிடம் இப்பயிற்சியின் பலன்கள் குறித்து எடுத்துரைத்து கொடி அசைத்து பயிற்சிக்கு வழி அனுப்பினார்.
இந்த பயிற்சியில் பழங்குடியின மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும் வழிகாட்டுதல் மேற்கொள்ளப்பட உள்ளது.