2-வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறப்பு, ஆடி பட்டத்தில் தேடி விதைக்க விவசாயிகள் ஆர்வம்,
வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல்லும் தயார்.
சாகுபடி பணிக்காக மேட்டூர் அணை கடந்த
ஜுன் மாதம் 12-ந் தேதியும், கல்லணை ஜுன் மாதம் 16-ந் தேதி
திறக்கப்பட்டது.

இதையடுத்து திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் குடவாசல் வட்டாரவிவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

வலங்கைமான் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் எக்டேர் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்ககப்பட்டு சாகுபடி பணிகள் மேற்க்
கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல் குடவாசல் வட்டாரத்தில் 4,600ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்
பட்டு வருகிறது.

கோடை வெப்பம் தணிந்து பருவ மழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் ”ஆடிப்பட்டம் தேடி விதை”என்றனர். ஜூனில் துவங்கும் தென் மேற்கு பருவ மழையால் பூமி குளிர்ந்து ஈரப்பதத்துடன் மண், பாசன வசதிக்கு ஏற்ப தயாராக இருக்கும். இதன்படி ஆடியில் விதைத்து தையில் அறுவடை செய்வர்.

விளைநிலங்களுக்கான முதல் மழழையை கொண்டு வரும் மாதம் ஆடி, ஆறுகளில் புது வெள்ளளம் பாயும். இது
புதிய விளைச்சலுக்குக் ஏதுவாக இருக்கும்.
விவசாயிகள் புது வெள்ள நீரைத் தொழது தங்கள் உழவு பணிகளைதொடங்குவர்.

மேலும் ஆடி மாதத்தில் ஓரிரு முறை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சலினால்போதும். புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக
கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்து விடும். மேலும் இந்த மாதத்தில் தான் மண்ணில் விழம் விதைகள் முழுமையாக முளைக்க தேவையான அருமையான தட்பவெப்பசூழ்நிலை நிலவும். ஆடி18-ந் தேதியும், அதற்குப் பிறகு விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும்.
ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம்.

பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளி
யும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும். கடுமையான கோடை காலங்களைச் சந்தித்த மண், இறுகி கடினமாக மாறியிருக்கும், ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளகதொடங்கும்.

மண்ணின்ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண்புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாகதொடங்கும். மழைக் காலங்களில் முளைத்திருக்கும் சிறிய செடிகளைமேய்க்கும் ஆநிரையின்
கழிவுகள், மண்ணுக்குஉரமாகி மண்ணுக்கு ஆற்றலைக் கொடுக்கும்.


பூமிக்கு வேண்டிய சூரியக் கதிர்களின் சக்தியும் மிகச் சரியாக
கிடைக்கும். இதனால் மண் செழிப்பதோடு, விதைத்த பிறகு பயிர்களும் செழித்து அறுவடையை மகிழ்ச்சியாக்குகிறது. இதை உணர்ந்து தான், முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என்னும் பழமொழியை உண்டாக்கினார்கள் என்பதை உணர்ந்த டெல்டா விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விதைக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

சாகுபடிக்கு தேவையான நீண்ட காலரக நெல் விதைகள் குடவாசல் தாலுக்காவில் குடவாசல், கண்டிரமாணிக்கம், தென்கரை, அய்யம்பேட்டை ஆகிய வேளாண்மை விரிவாக்கமையங்களிலும், வலங்கைமான் தாலுகாவில் வலங்கைமான், ஆலங்குடி, ஆவூர் மற்றும்
அரித்துவாரமங்கலம்வேளாண் விரிவாக்க
மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது ஆண்டாக மேட்டூர் அணை உரிய நேரத்தில்
டெல்டா மாவட்டங்களில்பாசனத்திற்கு தண்ணீர்
திறக்கப்பட்டதால் ஆடிபட்டத்தில் தேடி விதைக்க விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *