தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் வாசகர் வட்டம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2022 _ 2023 கல்வி ஆண்டில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் 600 க்கு 546 மார்க் எடுத்து முதல் மாணவனாக தேர்வு பெற்ற கீழ வடகரை ம .மோகன் பிரசாத்தை வாசகர் வட்டம்,நூலகர் சார்பாகவும் கீழவடகரை கிராம நிருவாக அலுவலர் அகிலன் அம்மாணவனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் வாசகர் வட்ட தலைவர் மோகன் தலையேற்று தலைமை உரையாற்றி பரிசு பொருள்களை வழங்கினார். புரவலர்கள் ஜெயராஜ் முன்னாள் இராணுவம் ஜெயராமன் நாயுடு மணி பூசாரி கிராம நிருவாக உதவியாளர் கருப்பையா சமூக ஆர்வலர் ராஜேஷ் நூலகர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்