தினேஷ்குமார் செய்தியாளர்
திருப்பத்தூரில் வணிகவரித்துறை துணை ஆணையர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை சாலையில் உள்ள வணிகவரித்துறை மறுசீரமைப்பு துவக்கம் மற்றும் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடங்கள் மற்றும் துணை ஆணையர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜான், துணை ஆணையர் பொறுப்பு ராம் மோகன், இணை ஆணையர் பொன்மாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்..