பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

நல்லூரில் ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் ஆலயத்தில்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம்…

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிரி சுந்தரி அம்மன் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னிதி வளாகத்தில்ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நவ சண்டியாகம் இரண்டு கால யாக பூஜையுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீமத் வேலப்பன் தம்பிரான் சுவாமிகள் ஆதீனம் முன்னிலையில் சப்த சதி பாராயணம் மற்றும்13 வகையான யாகப் பொருட்கள்,பழங்கள், இனிப்பு வகைகள், சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட நெய்வேத்திய பொருட்கள்,மலர் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகள்,பட்டுப்புடவை , மாங்கல்யம் உள்ளிட்ட பொருட்களை, யாக குண்டத்தில் சமர்ப்பித்து மகாபூர்ணாஹூதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து யாகத்தில் கலசங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு ஸ்ரீ அஷ்டபுஜ மகாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், குருக்கள்கள் ரமேஷ்,சிவன்,திருக்கோயில் பணியாளர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *