சோழவந்தான்
சோழவந்தான் அருகே கரட்டுபட்டி கீழ்நாச்சிகுளம் சாலாட்சிபுரம் நரிமேடு ஆகிய கிராம பகுதிகளில் மதுரை மாநாரட்சி வாழ் மக்களுக்கு பெரியாறு அணைலிருந்து குடிநீர் திட்டத்திகாக இராட்சத. குழாய்களை பூமிக்கடியில் பதித்து வரும். பணிகள் நடந்து வருகின்றது.
.ஏற்கனவே வைகை அணையிலிருந்து முதல் மற்றும் இரண்டு கட்டமாக குடிநீர் இராட்ச குழாய் பதிக்க விவசாய நிலங்களை உரிமையாளர்களுக்கு அரசு விலை கொடுத்து ஆர்ஜிதம் செய்து அந்த நிலத்திலிருந்த. லெட்சகனக்கான தென்னை உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்றி விட்டு குடிநீர் குழாய் மற்றும் . பராமரிப்பு பாதை அமைத்து மதுரை மாநகர் மக்களுக்கு. குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதை போல் பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு தனியார் நிலங்களை ஆர்ஜிதம் செய்து குழாய் பதிக்காமல் தற்போது நெடுஞ்சாலைதுறை சொந்தமான திருமங்கலம் பள்ளபட்டி சாலையில் அமைந்து உள்ள கரட்டுப்பட்டி கீழ்நாச்சிகுளம் சாலாட்சிபுரம் நரிமேடு ஆகிய கிராமங்களில், ஊடே செல்லும் முக்கிய போக்குவரத்து. தார்சாலையில் சுமார் 5.கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே 10.அடி ஆழம் பள்ளம் தோண்டி .இராட்சத குடிநீர் குழாய்களை பதிக்கும் பணிகளை கடந்த ஒரு வாரகாலமாக நடந்து வருவதால் இக்கிராமக்களின் முக்கிய போக்குவரத்திற்காக செயல்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பஸ் பள்ளி வாகனம். ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் அடியோடு தடை பட்டு உ ள்ளது.
இதனால் நான்கு கிராமங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கர்பிணி பெண்கள் சக்கரை.மற்றும் இருதயநோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற அவலநிலை தொடர்கின்றது மேலும் டுவீலர் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி வெளியூர்களுக்கு செல்லமுடியாத நிலையும் உள்ளதால் உணவு உள்ளிட்ட அத்தியவாசி பொருள் வாங்கமுடியாமல் தவிர்ப்புகுள்ளாகி வருகின்றர்.
இது குறித்து கீழ்நாச்சிகுளம் பாண்டீஸ்வரி 36.கூறியபோது. எங்கள் கிராம பகுதி போக்குவரத்தை துண்டித்து சாலையில் நடுவே குடிநீர் குழாய் பதிக்க எவ்வித முன் அறிப்பு செய்யாமலும் மாற்று பாதை ஏற்படுத்தாமலும் திடீறென்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்னே இயந்திரங்கள் மூலம் வேலையை தொடங்கிய சம்பந்தபட்ட அதிகாரிகளால் படிக்கும் மாணவர் அருகில் உள்ள ஊர்களுக்கு நடந்து சென்று பஸ் ஏறி படித்து வரும்நிலையில் நோய் பாதிப்புகுள்ளானவர் போதிய சிகிகச்சை கிடைக்க வழியின்றி வீடுகளிலே முடங்கி கிடைக்கின்றனர் .
மேலும் ஊராட்சி குடிநீர் குழாய்களை சேதப்படத்தி வருவதால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு வருகின்றது. என்றார் இது பற்றி கரட்டுபட்டி வெறியான் 55.கூறியதாவது
.மாநராட்சி அதிகாரிகளின் போதிய திட்டமிடல் இல்லாததால் ஊராட்சி கிராமங்களில் குடிநீர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது .இதனால் பெண் மற்றும். வயதானோர் .உணவு .மருந்து உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் வெளியூர் சென்று வாங்க முடியாமல் தவிர்ப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இப்பணிகளால் முடிந்த பின்னாலும் இச்சாலை பழைய நிலைக்கு செட்டாகாமல் மேடு பள்ளங்களாக மாறி கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையே ஏற்படும். இதனால் இப்பகுதி மக்களின் எதிர்கால போக்குவரத்து நலன் கருதி மாவட்ட கலெக்டர் நேரில் இப்பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் இராட்ச குழாய் பதிக்கு பணியை மாற்று பாதையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்