தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனையின் படிவிழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D.ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மயிலம் கிழக்கு மண்டலம் பாதிரா புலியூர் ஊராட்சியில் திறனற்ற திமுக அரசின் ஆட்சியைக் கண்டித்தும் அனைத்து மகளிர்களுக்கும் உரிமைத்தொகை 1000 வழங்க கோரியும்,சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை,அதனால் ஏற்படக்கூடிய மரணம் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக மயிலம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் அ.சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன் வரவேற்றார் . விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் , சந்திரலேகா விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக கனகராஜ் கலந்து கொண்டார்.ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் சந்திரலேகா,ரத்தினவேல், சீனுவாசன்,சதீஸ், கங்கா,சுந்தர்ராஜ்.
ராஜசேகர், மணிகண்டன், போத்தான் உட்பட மயிலம் கிழக்கு ஒன்றிய பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
