தமிழகத்தில் திமுக அரசின் விலைவாசி உயர்வு., சட்டமன்ற பிரச்சனை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்! தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், பவானி அந்தியூர் பிரிவில்! பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பவானி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று திமுக அரசின் மின் கட்டண உயர்வு,. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் லாட்டரி, மது, மற்றும் கஞ்சா உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்தும் பாஜகவினர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பவானி நகர தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்., சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மகளிர் அணி மாநில துணை தலைவர் வித்யா ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பவானி நகர பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்கள் மோகன் ரமேஷ் ஆசைத்தம்பி மாவட்ட செயலாளர் கண்ணன் பவானி நகர பொருளாளர் பிரவீன் நெசவாளர் பிரிவு செல்வகுமார் மாவட்ட செயற்குழு ராஜானந்தப்பன் நகர துணை தலைவர் லட்சுமி நாராயணன் பொறுப்பாளர்கள் சுப்பிரமணி மாதேஷ் பி என் ஆர் மனோகர் ஸ்டிக்கர் ராஜா மனோகர் கோபாலகிருஷ்ணன் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..