கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிக்கோட்டை வட்டம், அரசக்குப்பம் ஊராட்சி,சின்ன பெண்ணாங்கூர் பிரதான சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி முன்னிலையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நாராயணன், மற்றும் சிறப்புரையாற்றிய கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி,மேற்கு மாவட்ட செயலாளர் B.K கணேஷ் ரெட்டி ,கௌரவ தலைவர் முனிராஜூலு ,மகளிர் அணி மாவட்ட செயலாளர் தீபா , மாவட்ட பொருளாளர் முனிராஜ், இளைஞர் அணி விஸ்வநாத் , மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் மற்றும் சங்கரப்ப கௌடவ் , கெலமங்கலம் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் முனியம்மா ,ஒன்றிய கௌரவ தலைவர் பைரேஷ்,கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் பாபு, துணை செயலாளர் செல்வம், தளி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாபு ரெட்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் பாபு ரெட்டி, வடக்கு கௌரவ தலைவர் மரியப்பா ஏர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாராயணசாமி, நரசிம்ம ரெட்டி, லோகேஷ் ரெட்டி, அஸ்வத்தப்பா மற்றும் சுரேஷ் ,அஞ்செட்டி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மேரியம்மா மற்றும் சமூக ஆர்வலர்கள் மணி போச்சம்பள்ளி மற்றும் பெரிய பெண்ணாங்கூர் சேர்ந்த நரசிம்ம ரெட்டி ,அசோக் ரெட்டி, மஞ்சுநாத் ரெட்டி மற்றும் பெண்கள் உட்பட 100 – க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர் விவசாயிகளின் இந்த நிலைமையை அரசுக்கு கவனயீர்ப்பு வகையில் பிணம் வேடம் அணிந்து சங்கு ஒலி எழுப்பி சாம்பாரும் அடித்து விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டன பாதுகாப்பு வழங்கிய காவல்துறைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.