கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பேறு அள்ளி ஊராட்சியில் தமிழக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிருஷ்ணரி கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பேறு அள்ளி ஊராட்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். அதில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டை பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்,மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.