பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு ஒன்றியம் சார்பாக 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து மற்றும் எலவமலை பஞ்சாயத்து சார்பாக, காலிங்கராயன் கால்நடை மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு ஒன்றிய பொதுச்செயலாளர் உதயசங்கர் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.