கோவை
என்ஐஏ அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..
எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்து கோவையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் வீடு மற்றும் எஸ்டிபி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கோவை உட்பட 24 இடங்களில் என்ஐஏ சோதனையை நடத்தி வந்த நிலையில் நிர்வாகிகள் வீட்டில் இருந்த பணம் மற்றும் செல்போன்களை கைப்பற்றி சென்றனர்.
இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார், மாநில செயலாளர் ராஜா உசேன் கண்டன உரை நிகழ்த்தினார்,200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம், திராவிடர் தமிழர் கட்சி மாநில தலைவர் தோழர் வெண்மணி , தமிழ் புலிகள் கட்சி மாநில பொதுச் இளவேனில், அனீபா மாவட்ட துணைசெயலாளர் ,
SDPIவர்த்தக அணி மாவட்ட தலைவர் அசன் பாதுஷா, செய்தி தொடர்பாளர் மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.