திருவள்ளூர்
பெருவாயல் ஊராட்சியில் உள்ள எல்லையம்மனுக்கு ஆடி மாதத்தை முதல் ஞாயிற் கிழமை யொட்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் வாடை பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. பெருவாயல் ஊராட்சி இந்த ஊராட்சியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லை அம்மன் உள்ளது. இந்த எல்லையம்மன் அங்கு பிறந்ததாக வரலாறு கூறுகிறது.
இதை யடு த்து அந்த அம்மனுக்கு கோவில் கட்டி முன்னோர்கள் வழிபட்டு வந்ததாக கூறுகின்றனர்.
அதனையடுத்து வருடந்தோறும் அப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் ஆடி மாத முதல் வார ஞாயிற்றுகிழமை வாடைப் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆடி மாத வாடை பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர் பின்னர் மாலை எல்லையம்மன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.