தென்காசி மாவட்டம்
சுரண்டை அருகே சாம்பவர் வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில்
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர்ருடைய 121 வது பிறந்தநாள் விழா
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்குகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை தாங்கினர் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை உரையாற்றினார்
சுப்பிரமணியன் ஹரிஹர செல்வன் பந்தல் சேர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன் வரவேற்று பேசினார் இந்த நிகழ்ச்சியில் மதுரை தமிழ் இலக்கிய மன்ற தலைவர் அவனி மாடசாமி அவர்கள் விழா சிறப்புரை ஆற்றினார்கள்
தெக்ஷணமாற நாடார் சங்கம் தலைவர் ஆர் கே காளிதாசன் வேலன் காபி காமராஜ் ஜெயச்சந்திரன் திருமலைசாமி சேவியர் ராஜன் அம்மையப்பன் மற்றும் தேவைப்பட்டணம் ராயகிரி கொட்டாங்குளம் குத்துக்கல்வலசை பால மார்த்தாண்டபுரம் அய்யாபுரம் சுரண்டை சிவகிரி தெற்கு சத்திரம் கடையநல்லூர் விந்தன் கோட்டை ஆகிய நாடார் உறவின் முறைகள் நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் குற்றாலத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜருக்கு திருவுருவ சிலை வைக்க வேண்டும் என்றும் குற்றாலம் பழத்தோட்ட பூங்காவிற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் தமிழனின் இசை தான் மூத்த இசை என்றும் தமிழன் இசையில் இருந்து தான் கர்நாடகா இசை உருவானது என்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பு இசையை ஆராய்ச்சி செய்த சாம்பவர் வடகரையை சேர்ந்த ஆபிரகாம் பண்டிதருக்கு சாம்பவர் வடகரையில் நினைவு இல்லம் கட்ட வேண்டும் என்றும் தென்காசி ராஜகோபுரம் கட்டித் தந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவருடைய பெயரை தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்றும்சாம்பவர் வடகரையை தலைமை இடமாகக் கொண்டு தமிழக அரசு தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும் என்றும் தென்காசியில் பனைத் தொழிலாளர்கள் பயன்பெறுகின்ற வகையில் பனை பொருள் விற்பனை அங்காடி தமிழக அரசு சார்பில் தொடங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
முடிவில் அனைவருக்கும் தமிழ்நாடு நாடார் உறவினர்கள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் நன்றி கூறினார்கள் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முருகேசன் மோகன் மாரியப்பன் பரமசிவன் விஜயன் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்