திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் கிராம ஒன்றிணைப்பு சங்கம் சார்பில் 25 ஆவது ஆண்டு விழா
60 கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து காவல்துறை வல்லுறவு கூட்டம்குற்றங்களை தடுக்கும் வகையில் சி சி டி வி கேமரா அர்ப்பணித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நீதி அரசர் வேல்ராஜ் மற்றும் காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள 60 கிராமத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்கும் இளைஞர்களை நல்வழியில் கொண்டு செல்வதற்கும் போதை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினருடன் நல்லுறவை வளர்த்து அனைவரும் ஒன்று இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக சங்கத்தின் 50,000 பணத்தின் மூலம் மணலி விரைவு சாலையான மகாலட்சுமி நகர் ஜோதி நகர் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமராவை பொருத்தி அதனை காவல்துறையினருக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 60 தலைவர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு காவல்துறையினர் சால்வை அறிவித்து மரியாதை செய்து பின்னர் காவல் நிலையத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்றும் காக்கி சட்டை அணிந்து பொதுமக்களுக்காக தான் தாங்கள் பணி செய்து வருவதாகவும் இதுபோன்ற சாதி மதம் கட்சி இல்லாத கிராம ஒருங்கிணைப்பு சங்கத்தை நடத்திவரும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தற்போது போதை கலாச்சாரம் மற்றும் இளைஞர்களிடையே பெருகி வரும் நிலையில் இது போன்ற ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள் காவல்துறையினர் ஒன்றிணைந்து செயல்பட்டால் உடனுக்குடனே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து போதையை முற்றிலும் ஒழிக்கலாம் என்றும் இது போன்ற காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிராம ஒருங்கிணைப்பு நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் காவல்துறை உதவி ஆணையாளர் நிகழ்ச்சியில் பேசினர்
இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் ஆடி அனைவரையும் வரவேற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏழை எளியவர்களுக்கு அரிசி புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் கிராம ஒருங்கிணைப்பு சார்பில் வழங்கப்பட்டது