தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பத்திர எழுத்தர்கள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,இணை – 1பத்திர பதிவு அலுவலகம் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை தேனிக்கு மாற்றம் செய்ததை கண்டித்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் பத்திர எழுத்தர்கள் சார்பில், கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில்,பத்திர எழுத்துக்கள் சங்கத் தலைவர் அரிமா நாகராஜன், நகர் நலச்சங்க தலைவர் அன்புகரசன்,அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், அதிமுக எடப்பாடி அணி நகர பொறுப்பாளர் பழனியப்பன் பெரியகுளம் வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பெரியகுளம் நகர் நலச்சங்க நிர்வாகி விஜயகுமார், வளர்ச்சிப் பேரவை நிர்வாகி மணி கார்த்திக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், வடுகபட்டி பேரூராட்சி துணை தலைவர் அழகர் என்ற சுந்தரவடிவேலு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர்முருகன், பெரியகுளம் மக்கள் நல பேரவை நிர்வாகி ராஜவேல், மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள்,வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரிய குளத்தில் செயல்பட்டு வந்த பத்திரபதிவு அலுவலகங்களை தேனிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதை
மீண்டும் பெரியகுளத்தில் அமைத்திட கோரியும் இது சம்பந்தமாக அகிம்சை வழியில் போராட்ட களங்களை ஏற்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.