நாமக்கல்
பழங்குடியினர் பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுபான்மையினர் தாக்குதல் இவைகளை மணிப்பூர் மாநில பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மற்றும் மத்திய பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இரண்டுமே கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இன பெண்கள் மீது நடக்கும் பாலின வன்கொடுமையை கண்டித்தும் அங்குள்ள மணிப்பூர் மாநில பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மற்றும் மத்திய பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இரண்டுமே இதை கண்டு கொள்ளாமல் கண்டித்தும்
அங்குள்ள பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்த உடந்தையாக இருப்பதை கண்டித்தும்
இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
ஏராளமான ஆதித்தமிழர் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயலாளர் தி. மணிமாறன் தலைமை வகித்தார்