ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் 24.07.2023 மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 214 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யும் பணி நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் இயற்கை மரணம் நிவாரண தொகை 9 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு தலா ரூ.17,000 என மொத்தம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் வழங்கினார்கள். கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.