கும்பகோணம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
கும்பகோணத்தில் மணிப்பூரில் தொடரும் கலவரம், படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் 500 க்கும் பெண்கள் கலந்து கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் …..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தலைமை அஞ்சலகம் முன்பு மணிப்பூரில் தொடரும் கலவரம், 200 க்கும் மேற்பட்ட படுகொலைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசு கண்டித்து கும்பகோணம் தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள தொகுதி மகளிரணி பெண்கள் கலந்து கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கைகுழந்தையுடன் பெண்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.