சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சிக்குட்டப்பட்ட சாலைகளில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து தாழ்வாரம் மற்றும் கட்டிடங்கள் கட்டி உள்ளதால் அடிக்கடி வாகனங்கள் போக்குவரத்து நெருசலில் சிக்கி திணறி வருகின்றதால் வாகனோட்டிகளும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.பேரூராட்சிகுட்பட்ட போக்குவரத்து சாலையின் இருபக்க ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் மற்றும் சமுக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டகளை நடந்தி வந்தவேளையில் கடந்த ஜூலை. 20.ந் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் சாகாய அந்தோணி யூசின் சார்பில் சாலை ஆக்கிரமிப்பாளர். 258.நபர்களுக்கு நேரில் நோட்டீஸ் வழங்கியது.
அதில் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள 46.எண்.ரோடு( வேப்பமரம் பஸ் ஸ்டாப் ) பெரிய டை வீதி. மாரியம்மன் சன்னதி வீதி. முள்ளிப்பள்ளம் சந்திப்பு சாலை வட்டபிள்ளையார் கோவில். பேருந்து நிலையம். மார்கெட்ரோடு.மற்றும் பிரதான சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக ஆக்கிரமித்து முன்புறதாழ்வாரம். படிகட்டு மற்றும் கட்டிடங்களை கட்டுமான செய்து உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது. இதனால் நோட்டீஸ் கிடைத்த.(ஜூலை 27.ல்.) 7.தினங்களுக்குள்ளே ஆ க்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் இல்லையேல் நகராட்சி சட்டம் 1998.ன் , பிரிவு 128.ன்.கீழ் பேரூராட்சி . வருவாய்துறை நெடுஞ்சாலைதுறை மற்றும் காவல்துறை பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றி பின் அதற்கான செலவு தொகையை ஆக்கிர மிப்பாளர்களிடமிருந்து
வசூலிக்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தனர்