திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவரம்பாக்கம் ஊராட்சியில் மகளிர்க்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற் றது.
ஊராட்சி மன்ற கட்டிடம் முன்பு நடைபெற்ற இம்முகாமினை ஊரா ட்சி மன்ற தலைவர் ஜி. மதுரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஆரணி வருவாய் ஆய்வாளர் அபிராமி மானிட்டர் ஆபிஸர் மணி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று ஆய்வு செய் தனர் அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோ ஊராட்சி செயலாளர் சிவராஜ் கிராம உதவியாளர் வேணுகோ பால் உள்ளிட்டோர்உடனிருந்தனர்
முன்னதாக முகாமினை பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யா இராமநாதன் திடீரென நேரில் வந்து ஆய்வு செய்தார். இச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபர ப்பு ஏற்பட்டது.