எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி அருகே மீனவகிராம மாணவ மாணவிகளின் உயர்கல்வியை ஊக்கு விக்கும் விதமாக ஸ்டூடென்ட் டாட் காம் அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கும் விழா.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராம மாணவ மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமான ஸ்டூடென்ட் டாட் காம் சமூக அமைப்பின் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் ஷாலிக் ரகுமான் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தலைமையில் மாணவ மாணவிகளின் உயர்கல்வி பயிலுவதற்கான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் ஆதரவற்ற மாணவர்களை கண்டறிந்து அவர்கள் உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் விதமாக தலா 25,000 ரூபாய் மற்றும் சீருடை உதவித்தொகையும் 5 மாணவர்களுக்கு வழங்கினர்.இந்த கல்வியாண்டு கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அவர்களின் கல்லூரி சேர்க்கை கல்வி கட்டணத்தை ஸ்டுடென்ட் டாட் காம் அமைப்பினர் ஏற்றுக்கொண்டனர்.
ஸ்டுடென்ட் டாட் காம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ கிராம மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 5 லட்சம், கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இத்தொண்டு நிறுவனத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு செய்யப்படும் மீனவ கிராம மாணவ மாணவிகளின் கல்லூரி செலவு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு மாற்று கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்லூரி செலவு தொகையும் ஏற்று செயல்படுத்துகின்றனர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மீனவ கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.