அதிகம் விரும்பப்படும் பணி அமைவிடம் 2023-24” என்ற விருமதப் பெறும் உயர் நிறுவனங்களுள் ஒன்றாக “கீர்த்திலால்ஸ்” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
டீம் மார்க்ஸ்மென் நெட்வொர்க்” என்ற அமைப்பால் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இவ்விருதுக்கான வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், கண்ணோட்டங்கள் சார்ந்ததாக இந்த தனித்துவமான, தொழில்துறையால் முன்னெடுக்கப்படும் இச்செயல் திட்டம் அமைந்திருக்கிறது. நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களது நலவாழ்வை கருத்தில் கொண்டு அவர்களது நலவாழ்வை தங்கள் செயல்பாட்டின் மையமாக கருதி செயல்படும் நிறுவனங்களே பலராலும் பணியாற்றுவதற்காக விரும்பி தேர்வு பெய்யப்படும் நிறுவனமாக திகழ்கிறது. தொழில்துறையில் கௌரவம் மிக்கதாக கருதப்படும் விருதை பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தன் மற்றும் டீம் மார்க்ஸ் மென் நெட்வொர்க்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ராஜேஷ் குப்சந்தானி ஆகியோர் வழங்க கீர்த்திலாஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் இயக்குனர் சீமா மேத்தா மற்றும் குழும மனித வளத்துறை தலைவர் டாக்டர் ஆர்.சங்கீதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.