எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக திறந்து விட கோரியும் , காவிரி நதிநீர் ஆணையம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க உத்தரவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஞான.பிரகாசம் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் செல்லப்பன் மற்றும் ஒன்றிய குழுவை சேர்ந்தவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் மத்திய அரசு அதிகரித்து வரும் விவசாயிகளை தற்கொலை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், சீர்காழி வட்டாரத்தில் கடந்த ஆண்டு பெய்த அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசு அறிவித்தபடி பயிர் காப்பீடு வழங்க வேண்டியும் , இந்த மாத இறுதிக்குள் அனைத்து பாசன வடிகால் வாய்க்காலி இன தூர்வாரி நீர் மேலாண்மைக்கான ரெகுலேட்டர்களை கட்டித்தரக் கோரியும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை பாரபட்சமின்றி விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளும் வழங்கிட வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது காவிரி நதிநீர் பிரச்சனையில் அரசியல் கட்சியினர் அதனை ஜீவாவாதார பிரச்சனையாக பார்க்காமல் வாக்கு பிரச்சினையாகவே பார்க்கின்றனர் என்று பேசினர்.