கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் ….
மணிப்பூரில் இன கலவரத்தில் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலவரக்காரர்கள் அங்குள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ நாடு முழுவதும் பரவி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து, வருகின்றனர்.
நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாலக்கரை அருகில் உள்ள அரசினர் கலை கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு
உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி மாணவர்கள்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.