கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மணிப்பூரில் கிறிஸ்துவ பழங்குடி குக்கி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை செய்ததை கண்டித்தும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்தை அப்புறப்படுத்தும் நோக்கில் உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி தொடர்பாளர் கா.மோகன் என்கின்ற தமிழ்வளவன் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் முனிராவ், மாநில துணைச் செயலாளர் அம்பேத்கர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் துரைவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
ஒன்றிய செயலாளர் சூளாகரை மூர்த்தி வரவேற்றார், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் இளஞ்சூரியன், மாவட்ட துணை அமைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட துணை அமைப்பாளர் பிரகாஷ், தொகுதி துணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் மாயக்கண்ணன்,ஒன்றிய. துணைச் செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் செந்தில், நகர செயலாளர் வெங்கடேஷ், விடுதலை மதி, குமரேசன், சிந்து, கோவிந்தன்,
மனோஞ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்,
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிச் செயலாளர் சதஷ் என்கின்ற சேட்டு, ஒன்றிய துணை செயளாளர் திருப்பதி ஏற்பாடு செய்திருந்தனர், ஆர்ப்பாட்டம் நிறைவில் வீரமணி நன்றி உரை வழங்கினார்.