திருவள்ளூர்
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 ஜெ மாவட்டம் சார்பில் மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆளுனர் வி.பஜேந்திரபாபு தலைமையில் கோயம்பேடு செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்டத் தலைவர் (பதவியேற்பு) எஸ்.நாராயணன் மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
பன்னாட்டு முன்னாள் இயக்குர் ஆர்.சம்பத் மாவட்ட நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்னாட்டு முன்னாள் இயக்குநர்கள் ஜி.ராமசாமி, கே.ஜி. ராமகிருஷ்ண மூர்த்தி, முன்னாள் ஆளுநர்கள் பி.வி. ரவீந்திரன், ஆர்.ஸ்ரீதரன், முதல் நிலை ஆளுநர் ஏ.டி. ரவிச்சந்திரன், இரண்டாம் நிலை ஆளுநர் பி.மணிசேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மாவட்டச் செயலாளர் பி.வெங்கடேஷ் பாபு, மாவட்டப் பொருளாளர் வி.,சரவணன், மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர். கல்யாணி, வி.கல்யாணசுந்தரம், பி.மோகன்குமார், சி.பாலாஜி, கே.தனசேகர், டிவிஜெ. வெங்கட்ரமணன், சி.ராஜேஷ் உள்ளிட் நிர்வாகிகள், மண்டலம், வட்டாரம், மாவட்டத் தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
முன்னதாக மண்டலம் வாரியாக அணிவகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களைச் சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.