ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ. நேரில் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் .தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீடாமங்கலம் பேரூராட்சியில்.395.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினையும்
.248.20 லட்சம் மதிப்பீட்டில் பரப்பனாமேடு பகுதியில் மேலபூவனூர், பரப்பனாமேடு, ஒரந்தூர், கொரையூர் தலப்பகுதியில் நடைபெற்றுவரும் சாலைமேம்பாட்டு பணிகளும், 32.34 லட்சம் மதிப்பீட்டில் காளாஞ்சேரி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக. கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறைகளையும், காளாஞ்சிமேடு பகுதியில் 4.53 லட்சம் மதிப்பீட்டில் கீழ தெரு பகுதியில் சாலை அமைக்கப்பட்டுவருவதையும்,4.38 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் தெருவில் அமைக்கப்பட்டுவரும் பிளெவர் பிளாக் சாலையினையும், .8.94 லட்சம் மதிப்பீட்டில் நாவல்பூண்டி பகுதியிலுள்ள பாப்பன்குளம் தூர்வாரப்பட்டுவருவதையும், வடகாரவயல் பகுதியில் 42.25 லட்சம் மதிப்பீட்டில் தென்காரவாயல் பகுதியில் சாலை வசதியினை மேம்படுத்தப்பட்டுவருவதையும், 32. 34 லட்சம் மதிப்பீட்டில் தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறைகளையும் சமையலறை புனரமைக்கப்பட்டுவருவதையும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக. நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் காளாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஆய்வில், நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வன் வட்டாட்சியர் பரஞ்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன் நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்