திருச்சியில் 27-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை
நடைபெறும் வேளாண்சங்கமம் நிகழ்ச்சியில்விவசாயிகள் பங்கேற்கவேளாண் அதிகாரி அழைப்பு.
திருச்சியில் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் வேளாண்சங்கமம் நிகழ்ச்சியில்வலங்கைமான், குடவாசல் விவசாயிகள் கலந்து கொள்ள வேளாண் உதவி இயக்குனர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி
யிருப்பதாவது:
வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மாநில வேளாண்கண்காட்சி திருச்சியிலும், உழவர்
உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், வாழை மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும், பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டது.
கடந்த8மற்றும்9-ந் தேதிகளில்சென்னையில் உழவர்
உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி
நடைபெற்றது. இதையடுத்து வேளாண்
வணிகத் திருவிழா நடைப்பெற்றது.
இதில்ரூ 2.5கோடி மதிப்பிலானமதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக ஜுலை 27-ந் தேதி முதல் 29-ந்
தேதி வரையிலான 3 நாட்களுக்கு திருச்சியில்
மாநில வேளாண் கண்காட்சி (வேளாண் சங்கமம்) நடைபெறுகிறது.
திருச்சியில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் விதைகள், தென்னங் கன்றுகள், பழமரக்கன்று
கள் ஆகியவற்றை காட்சி ப்படுத்துவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடு
கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மேலும் அனைத்துவேளாண் இயந்திரங்க ளையும் காட்சிபபடுத்தநடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விவசாயிக ளுக்கான அரசின் அனைத்து திட்டங்களைப்
பற்றியும் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்படஉள்ளது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மதிப்புக்
கூட்டப்பட்ட பொருட்களைவிற்பனை செய்திடவும், விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்ப ங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், தோட்டக்கலை
தொழில்நுட்பம், நவீனவேளாண் இயந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற தலைப்புகளில்கருத்தரங்களும் நடைப்
பெறவுள்ளன. எனவே இந்த நிகழ்ச்சியில் வலங்கைமான் மற்றும்குடவாசல் தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்
துள்ளார்.