ஜே சிவக்குமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
ஏழாவது சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப்போட்டி அறிமுக விழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப்போட்டி கோப்பை அறிமுகம் செய்யும் விழா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி .ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் கோ.பாலசுப்ரமணியன் உடனிருந்தனர்.
ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப்போட்டி கோப்பை அறிமுகம் செய்யும் விழா பேரணியாக மன்னார்குடி முக்கிய பிரதான தேரடி வீதியிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக. சென்று மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பின் லே மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் தெரிவித்ததாவது
தமிழக முதலமைச்சர் அவர்களின்அரசு பொறுப்பு ஏற்றது முதல் பல்வேறு வகையில் இளைஞர்களின் எதிர்காலத்தினை பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துகின்ற வகையிலும் எதிர்காலத்தில் இளைஞர்கள் தான் வழிநடத்தப்போகிறார்கள் என்ற உணர்வுடன் பல்வேறு தீட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்
கடந்தாண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் உலக செஸ் போட்டியினை சென்னையில் நடத்தி இந்தியாவிற்கே பெருமை தேடி தந்தவர் தமிழக முதலமைச்சர் என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்தார்
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
காலையில் எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதியின் வரிகளுக்கு ஏற்றவாறு தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் உயர்கல்விக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளித்துவருகிறதோ அதே அளவிற்கு விளையாட்டுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் அரசு வழங்கிவருகிறது. காலகட்டத்தில் விளையாட்டு வீரர் ஆக உள்ள அனைவருக்கும் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன முன்ன தொரு காலகட்டத்தில் விளையாட்டிற்கு வழங்கப்படாத வாய்ப்பினை தற்பொழுது அரசு வழங்கி வருகிறது .
உலக அளவிலான. செஸ் போட்டி தமிழகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. அது விளையாட்டிற்கான உத்தேவகமாக அமைந்தது. தற்போது ஆசிய அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ளது.
தற்பொழுது விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. விளையாட்டு உடல்நலத்திற்கும், மன நலத்திற்கும் சிறந்தது. இங்கு விளையாட்டு வீரர் ஆக உள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் ஏதாவது ஒரு விளையாட்டில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றிபெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார்.மாவட்ட வருவாய் அலுவலர .சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனா மணி, மன்னார்குடி நகர்மனறத் தலைவர் மன்னை சோழராஜன், திட்டக்குழு உறுப்பினர் திரு.சங்கர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா டேரிங் யங்ஸ்டர்ஸ் ஹாக்கி கிளப் தலைவர் மகேந்திரன் திருவாரூர் மாவட்ட ஹாக்கி கழக துணைத்தலைவர் ஸ்ரீராம் முன்னாள் மண்டல விளையாட்டு முதன்மை மேலாளர் சேவியர் சற்குணம் மாநில துணைத்தலைவர் ஹாக்கி சங்கம் சுப்ரமணியம் மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்