ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்


தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தின் கீழ் நடப்படும் மாபெரும் எண்ணெய் பனை செடி நடவு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், ஆவூர் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை செடி நடவு விழாவில், எண்ணெய் பனை செடியினை நட்டு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ. தொடங்கி வைத்தார்கள்.

எண்ணெய் பயிரானது நடவு செய்ததிலிருந்து மூன்றாண்டுகளில் மகசூல் தரவல்லது. ஒரு ஏக்டருக்கு 20-லிருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது.

அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.13,346 வரை அரசு அங்கீகரித்த கோத்ரேஜ் அக்ரோவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வது சிரமமின்றி கையாளப்படுகிறது.

எண்ணெய் பனை நடவு செய்வதற்கு தேவையான மண் வகை, வண்டல் கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதி மிக்கப்பகுதி ஏற்றதாகும். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் திட்டத்தின் கீழ் மாபெரும் எண்ணெய் பனை செடி நடவு விழா ஆகஸ்ட் 5 வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் பயனாளிகள் தேவையான ஆவணங்களான கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2, நில வரைபடம் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றை அந்தந்த வட்டார தோட்டக்கலைஉதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தும் இணையதளம் மற்றும் உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

திட்ட மானிய விபரமாக பரப்பு விரிவாக்கத்திற்கு ஹெக்டேருக்கு .29,000பராமரிப்பு (ம) ஊடுபயிர் ஹெக்டேருக்கு ஒரு வருடத்திற்கு 10500ம், பராமரிப்பு (ம) ஊடுபயிர் ஹெக்டேருக்கு இரண்டு வருடத்திற்கு 10500ம பராமரிப்பு (ம) ஊடுபயிர் ஹெக்டேருக்கு மூன்று வருடத்திற்கு ரூ.10500 பராமரிப்பு (ம) ஊடுபயிர் ஹெக்டேருக்கு நான்கு வருடத்திற்கு 10,500 எண்ணெய் பனை அறுவடை கருவிக்கு.15000ம், அலுமினிய ஏணி 5000ம் வழங்கப்படுகிறது.

மேலும் தகவல் மற்றும் தொழில் நுட்பங்களை அறிந்திட. திருவாரூர் தோட்டக்கலை துணை இயக்குநர் அ.வெங்கட்ராமன் தொலை பேசி எண் 9842184435, திருவாரூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆர்.திவ்யா தொலை பேசி எண் 96007 20070, திருவாரூர் நன்னிலம் தோட்டக்கலை உதவி இயக்குநர் செல்வி.ஆர்.ஜனனி தொலைபேசி எண்: 9599859687 மன்னார்குடிநீடாமங்கலம் கோட்டூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் தொலைபேசி எண். 9500567619. கொரடச்சேரி குடவாசல் வலங்கைமான் தோட்டக்கலை உதவி இயக்குநர் திருச்செல்வன் தொலைபேசி எண் 9659651859 திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் க.இளவரசன் தொலைபேசி எண் 95858 74567 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆர்.திவ்யா செல்வி.ஆர்.ஜனனி எம்.சத்தியஜோதி திருச்செல்வன் க.இளவரசன் வட்டாட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *