தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்;-

10 ஊராட்சி ஒன்றியம் 210 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்பு:-

தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவரும் கோவிந்த பெரி ஊராட்சி மன்ற தலைவருமான T.K.பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டமைப்பு தலைவர்கள் கீழப்பாவூர் ராஜ்குமார், ஆலங்குளம் நீதிராஜன்,எம் எம்.நல்லூர் விஸ்வாசம், குருவிகுளம் ராதா பரசுராமன், சங்கரன்கோவில் வேலுச்சாமி கடையநல்லூர் முத்தையா,வாசுதேவநல்லூர் அமுதா ராணிபாய்,கடையம் பூமிநாத்,செங்கோட்டை சந்திரசேகர், மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி, மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் அன்புராணி, மாவட்ட செயலாளர்கள்,பூமாரியப்பன், துப்ராஹிம்மாவட்ட செய்தி தொடர்பாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்களிக் கூட்டமைப்பு மாநில தலைவர்எம் முனியாண்டி , தமிழக ஊராட்சி மன்ற கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்ஆரணி ராஜன் ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு
பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றிய
சிறப்புரை வழங்கினர்.

மாவட்ட ஆலோசகர்கள் சந்திர சேகர், சிவஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாள் பெரிய பிள்ளைவலசை ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தொகுப்புரை வழங்கினார்.

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தென்காசி, கடையநல்லுர், ஆலங்குளம் கீழ்ப்பாவூர், குருவிகுளம், கடையம், செங்கோட்டை, எம் எம்.நல்லூர் ஆகிய ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கலந்து கொண்டனர்.

முடிவில் ஆலங்குளம் ஒன்றியம் கூட்டமைப்பு துணை தலைவரும் கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *