திருவள்ளூர்

பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டி தரக்கோரி மாவட்ட கவுன்சிலர் தேவிதயாளன், மற்றும் பலர் கோரி க்கையைடுத்து பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இதனைச் சுற்றி சுமார் ஒரு ஏக்கர் காலி இடங்கள் உள்ளது இந்த பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் உபயோக ப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட 13 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் காங்கிரஸ் கட்சி மாநில விவசாய அணி செயலா ளர் தயாளன் மற்றும் அப்பகுதி யைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் எம் செல்வராஜ், தர்பார்ண்யன், ஆகியோர் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப் பினர் துரை சந்திரசேகர் இடம் பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத் ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் நேரில் ஆரம்ப சுகா தார ஆய்வு செய்து நோயாளிக ளும் மற்றும் மருத்துவரிடம் குறைகளை கேட்டார் பின்னர் ஆய்வு செய்து சுற்றுச்சுவர்கட்டி தருவதாக தொடர்பாகவும் கட்டித் தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது பொன்னேரி தாசில்தார் செந்தில்குமார், சோழ வரம் ஆணையாளர் ராமகிருஷ்ண ன்,மாவட்ட கவுன்சிலர் தேவி தயா ளன், ஒன்றிய கவுன்சிலர் சாரதா ரவி, மாநில காங்கிரஸ் கட்சி விவ சாய அணி செயலாளர்தயாளன், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவா சன், திமுக கிளைச் செயலாளர் எம். செல்வராஜ், ஆரணி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரும் திமுக நிர்வாகியுமான தர்பார் ரணயன்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *