பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் கோயமுத்தூர் அக்ஷயம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டம் சார்பாக சமூகம் சார்ந்த பல்வேறு சேவைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..இந்நிலையில் 324 சி மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் கோயமுத்தூர் அக்ஷயம் 2023 -24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை ஒய்.எம்.சி.ஏ.வளாக அரங்கில் நடைபெற்றது..
முன்னதாக நாட்டிய மயூரி செல்வி ஆர்.சி.சம்யுக்தாவின் பரதநாட்டிய நிகழ்வுடன் விழா துவங்கியது.. பன்னாட்டு இயக்குனர் மதனகோபால்,ஐ.பி.டி.ஜி.மற்றும் பொருளாளர் ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கோயமுத்தூர் அக்ஷயம் கிளப் நிகழ்வு தலைவர் கர்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் சங்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களை முன்னாள் ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து முன்னாள் ஆளுநர் டாக்டர் பழனிசாமி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் விதிமுறைகளை எடுத்து கூறி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் லயன்ஸ் கிளப் கோயமுத்தூர் அக்ஷயம் 2023-24 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக டாக்டர் ஆர்.சந்திரபிரபா,அட்மின் செயலாளர் சிவராஜ்,செயல் செயலாளராக கென்னடி,பொருளாளராக கர்ணன் ஆகியோர் பதவி ஏற்றி கொண்டனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பன்னாட்டு இயக்குனர் மதனகோபால், முன்னாள் ஆளுநர்கள் கருணாநிதி,டாக்டர் சாரதாமணி பழனிசாமி,நடராஜன், முதல் துணை நிலை ஆளுநர் நித்யானந்தம், இரண்டாம் துணை நிலை ஆளுநர் , ராஜசேகர்,,மற்றும் பசிப்பிணி மற்றும் சேவை திட்ட தலைவர்கள் செல்வராஜ்,ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..
.புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு அரிசி,மளிகை போன்ற பொருட்களும்,மாணவ,மாணவிகளுக்கு சீருடைகள்,விளையாட்டு உபகரணங்கள் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சார்ட்டர் பிரசிடென்ட் ஷீபா கர்ணா,முன்னாள் கேபினட் செயலாளர் ராஜ் மோகன்,சார்ட்டர் பொருளாளர் பாபு, உட்பட மண்டல,வட்டார நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.