கொளத்தூர் செய்தியாளர் அகமது அலி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா ‌கல்லூரியில் பயிலும் ஆராய்ச்சி துறை மாணவர்கள் மோன்டிரிக்ஸ் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து பதவி பொறுப்புக்களை அளிக்கும் நிகழ்வு கல்லூரி அரங்கில் நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தேசிய ராணுவம் மற்றும் இந்திய சுதந்திர லீக் அமைப்பின் உறுப்பினர் சுதந்திர போராட்ட தியாகி வி. கே. செல்வம் மற்றும் திரைப்படக் கலைஞர் நடிகர் ஜெமினி பாலாஜியையும் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தனர்.

அதன்பின் நடந்த மாணவர்கள் கலந்துரையாடலில் சுதந்திர போராட்ட தியாகி வி. கே செல்வம் பேசும் போது தனது சுதந்திரப் போராட்ட களம், அப்போதைய வாழ்வியல், ஆங்கிலேயர் காலத்தில் இருந்த ஒடுக்கு முறைகள், சுதந்திரம் பெற்ற விதம் மற்றும் நேதாஜி, காந்தி ஆகியோர் பற்றி நினைவு கூர்ந்தார்.

மேலும் நான் சுதந்திரப் போராட்டத்திற்கு செல்லும்போது எனது செலவுக்காக வீட்டில் இருந்த நகைகள் மற்றும் எனது தாய் அவரது தாலியை கழற்றி என்னிடம் கொடுத்து அனுப்பினார். தற்போது 2 பேர் கூட விட்டுக் கொடுத்து ஒன்றாக வாழ முடியாத காலகட்டத்தில், 50 பேர் கொண்ட கூட்டு குடும்பமாக இன்றுவரை வசித்து வருவதாகவும் பெருமையுடன் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *