பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் மணிப்பூர் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக மணிப்பூர் மாநில அரசை பதவி நீக்கம் செய்யக்கோரியும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அண்ணாசிலை அருகே
மணிப்பூர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்திற்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக கோரியும் , பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க வேண்டியும் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலமாக அண்ணாசிலையில் தொடங்கி முக்கிய கடைவீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.
இந்த அமைதி ஊர்வலத்தில் பெண்கள் உட்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பாபநாசம் கடைவீதியில் அமைதி ஊர்வலமாக சென்று தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.