தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வள மைய அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் உள்ள திருப்பத்தூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வள மைய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி திட்டம் சார்பில் ஒன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஜாலி ஃபோனிக்ஸ் பயிற்சி வகுப்பு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அலுவலர் முனிசுப்புராயன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நாக்பூர் பகுதியில் இருந்து வந்துள்ள பயிற்சியாளர்கள் தீபா ஜோசப், ஆர்த்தி குப்தா, அவனி டோலஸ் ஆகியோர் பயிற்சி வகுப்பு நடத்தினர். இதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மேற்பார்வையாளர் சாக்கி மற்றும் 115 ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..